ஜெனீவாவிலுள்ள ஒரு வீட்டில் குண்டுக்காயங்களுடன் கிடந்த தம்பதி: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள Chatelaine என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் ஒரு தம்பதி உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணையில், 64 வயதான அந்த கணவர், 58 வயதான தன் மனைவியை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால், அந்த பகுதியில் துப்பாக்கி சுடும் சத்தம் எதுவும் கேட்கவில்லை என்று கூறும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், தாங்கள் அந்த தம்பதியர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
காரணம், அந்த தம்பதியர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் என்றும், அவர்கள் சண்டை போட்டு ஒருபோதும் யாரும் பார்த்ததில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வீட்டுக்கு வந்த அந்த தம்பதியரின் உறவினர் ஒருவரே, இந்த அதிர்ச்சியளிக்கும் காட்சியைக் கண்டு பொலிசாருகு தகவலளித்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.