அமெரிக்க கனடா எல்லையில் திருமணம் செய்து கொண்ட ஜோடி: காரணம் இதுதான்
தங்கள் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக, அமெரிக்க கனேடிய எல்லையில் திருமணம் செய்துகொண்டார் ஒரு கனேடிய பெண்.
அமெரிக்காவில் வாழும் Brian Rayம் Karen Mahoneyயும் நீண்ட நாட்களாக காதலித்து வருபவர்கள். திருமணம் செய்துகொள்ள அவர்கள் முடிவெடுத்தபோது, இரு குடும்பத்தினர் முன்னிலையிலும்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும், குறிப்பாக திருமணத்தில் நிச்சயம் கனடாவில் வாழும் Karenஉடைய 96 வயது பாட்டி இருந்தே ஆகவேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்தார்கள்.
விமானத்தில் கனடாவிலிருந்து Karenஉடைய குடும்பம் அமெரிக்காவுக்குச் செல்லலாம்தான். ஆனால், இந்த கொரோனா காலகட்டத்தில் பாட்டியை ரிஸ்க் எடுக்கவைக்க யாருக்கு விருப்பம் இல்லை.
ஆகவே, தம்பதியர் அமெரிக்க கனேடிய எல்லையில் திருமணம் செய்துகொள்வது என முடிவு செய்தார்கள்.
அதன்படி, முறையாக இரு நாட்டு எல்லை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தபின், Brian, Karenஇன் திருமணம் அமெரிக்க கனடா எல்லையில் நடைபெற்றது.
அமெரிக்கப் பகுதியில் தம்பதியரும் மணமகனின் குடும்பத்தாரும் நிற்க, கனடா பகுதியில் மணமகளின் குடும்பத்தினர் நிற்க, Brian, Karenஇன் தம்பதியரின் திருமணம் இனிதே நடந்தேறியது.
இந்த காலத்திலும் பெற்றோருக்கு, அதுவும் தாத்தா பாட்டிக்கு கௌரவம் செலுத்துபவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிய மனதுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.