நீர்க்கொழும்பில் எங்கள் வீட்டை எரிக்கும் அளவுக்கு என்ன தவறு செய்தோம்? ஜேர்மன் குடியுரிமை பெற்ற இலங்கை தம்பதி ஆதங்கம்: வீடியோ
இலங்கையில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் வீடு சூறையாடப்பட்ட நிலையில் அது குறித்து அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரு குழந்தைகளின் வீடே சூறையாடப்பட்டுள்ளது. தம்பதி பேசுகையில், நாங்கள் என்ன தவறு செய்தோம், எங்களுக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நீர்கொழும்பில் எங்கள் வீடு சூறையாடி எரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்றவர்கள், வீட்டின் உள்ளே இருந்த புத்தக பைகள் எல்லாம் எங்கே என எங்கள் பிள்ளைகள் கேட்கிறார்கள்.
எங்கள் வீடுகளை எரிக்கும் அளவுக்கு நாங்கள் என்ன தவறு செய்தோம், எங்களுக்கு ஓட்டுரிமை கூட இங்கு கிடையாது என கூறியுள்ளனர்.
"நாம் என்ன தவறு செய்தோம்எமக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"- நீர்கொழும்பில் வீடு சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்ட தம்பதியினரின் ஆதங்கம்
— Priyatharshan ? (@priyatharshan1) May 10, 2022
"What wrong did we do, we have nothing to do with politics,"says couple whose house in Negombo was ransacked & set on fire #SriLanka pic.twitter.com/kZrEs5s95m