கனடாவில் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்கள்: பொலிசார் மீது வழக்கு

Canada Indian Origin
By Balamanuvelan May 20, 2026 12:50 PM GMT
Report

கனடாவில் வாழும் தங்கள் பிள்ளைகளைக் காண்பதற்காக சென்ற இந்திய தம்பதியர் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்டதற்காக பொலிசார் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர் அவர்களுடைய பிள்ளைகள்.

தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்கள்

2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்தியர்களான ஜக்தார் சித்துவும் (57) ஹர்பஜன் சித்துவும் (55), கனடாவின் ஒன்ராறியோவில் வாழும் தங்கள் பிள்ளைகளான ஜஸ்பிரீத் சிங் சித்துவையும் (31), குர்தீப் சிங் சித்துவையும் (29) காண்பதற்காக கனடா வந்துள்ளார்கள். 

கனடாவில் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்கள்: பொலிசார் மீது வழக்கு | Couple Killed In Mistaken Shoot By Canada Police

அவர்கள் ஒன்ராறியோவிலுள்ள வீடொன்றில் தங்கள் பிள்ளைகளுடன் தங்கியிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் சித்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

ஜக்தார் சித்துவும், ஹர்பஜன் சித்துவும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அவர்களுடைய மகளான ஜஸ்பிரீத் மீது 13 குண்டுகள் பாய்ந்தன.

18 மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் பல மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரீத் அனுபவித்த, அனுபவித்துவரும் துன்பங்கள் ஏராளம். ஜஸ்பிரீத்தின் தோள் முதல் கால்கள் வரை கால்கள் வரை குண்டுகள் பாய்ந்திருந்தன. 

கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர்

கனடாவில் மரம் வெட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு 49,000 ரூபாய்: அதிர்ச்சியடைந்த இந்தியர்

அவரது தொண்டையில் குண்டு பாய்ந்ததால் சிறிது காலம் பேசும் திறனை இழந்திருக்கிறார் ஜஸ்பிரீத். ஒரு குண்டு, முதுகுத்தண்டின் அருகே சிக்கிக்கொண்டுள்ளதால், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றமுடியாத நிலை உள்ளது.

தாக்குதல்தாரிகள் யார்?

விடயம் என்னவென்றால், போதைப்பொருள் விடயம் தொடர்பில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் இருந்த பகை காரணமாக, ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் தவறுதலாக சித்து குடும்பத்தினரை சுட்டுவிட்டார்கள்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், சம்பவம் நடப்பதற்கு நான்கு நாட்கள் முன் பொலிசார் சித்து குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்துள்ளார்கள். 

கனடாவில் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்கள்: பொலிசார் மீது வழக்கு | Couple Killed In Mistaken Shoot By Canada Police

அங்கு ‘பாபி’ என்னும் பெயர் கொண்ட ஒருவர் தங்கியிருக்கிறாரா என பொலிசார் விசாரிக்க, அப்படி யாரும் இல்லை என்று கூறியுள்ளார்கள் சித்து தம்பதியர்.

பொலிசார் வந்து சென்ற நான்கு நாட்களுக்குப் பிறகு, மர்ம நபர்கள் வந்து சித்து குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சித்து தம்பதியர் உயிரிழந்துவிட்டார்கள்.

இழப்பீடு கோரி வழக்கு

இந்நிலையில், பெற்றோரை இழந்த ஜஸ்பிரீத் சிங் சித்துவும், குர்தீப் சிங் சித்துவும், பீல் பிராந்திய காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

பொலிசார் தங்கள் வீட்டுக்கு வந்து பாபி என்னும் நபர் குறித்து விசாரித்தபோது, எப்படி பாபி அங்கு இருப்பார் என பொலிசார் எண்ணினார்களோ, அதேபோல் எண்ணித்தான் அந்த பாபியின் எதிராளிகள் வந்து அந்த வீட்டில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்.

ஆக, அன்று பாபி என்னும் நபரைத் தேடி தங்கள் வீட்டுக்கு வந்த பொலிசார், அந்த வீட்டிலிருப்பவர்களுக்கு உயிருக்கு ஆபத்து உள்ளது என எச்சரித்திருந்தால், தங்கள் பெற்றோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என பிள்ளைகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

13 குண்டுகள் உடலில் பாய்ந்ததால் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் ஜஸ்பிரீத் இன்னமும் வலியும் வேதனையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.

ஆகவே, தங்கள் பெற்றோரின் உயிரிழப்பைத் தடுக்க வாய்ப்பிருந்தும் அதைத் தடுக்கத் தவறிய பொலிசார், தங்களுக்கு 80 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி ஜஸ்பிரீத் சிங் சித்துவும், குர்தீப் சிங் சித்துவும், பீல் பிராந்திய காவல்துறை மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US