மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தம்பதியர்... லொட்டரியால் நேர்ந்த துயரம்
ஒரு பிரித்தானிய தம்பதியருக்கு லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்தபோது, மகிழ்ச்சியில் அவர்களுக்கு தலையும் காலும் புரியவில்லை.
ஆனால், அதிர்ஷ்டம் என நினைத்த அந்த லொட்டரி, பெரும் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவந்துவிட்டது.
லொட்டரிக்கு முன்பும் பின்பும்
காலை முதல் மாலை வரை கணவனும் மனைவியும் அலுவலகத்தில் கஷ்டப்பட்டு வேலை பார்த்துவந்தபோது கூட ரோஜர், லாரா (Roger and Lara Griffiths) தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
லொட்டரிக்காக ரோஜர் வாரம் ஒன்றிற்கு வெறும் 2பவுண்டுகள் மட்டுமே செலவிடுவாராம்.
Credit: SWNS
ஆனால், அவர் நம்பியதுபோலவே லொட்டரியில் பரிசு கிடைத்தபோதோ, வாழ்க்கை வேறு பக்கம் திரும்பிவிட்டது. ஆம், 2005ஆம் ஆண்டு தம்பதியருக்கு லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.
பணத்தை எப்படி செலவிடுவது?
பணத்தை எப்படி செலவிடுவது என்பது குறித்து லாராவுக்கும் ரோஜருக்கும் வித்தியசாமான திட்டங்கள் இருந்திருக்கிறது. வேலைகளை ராஜினாமா செய்துவிட்டு இருவருமாக கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பணத்தை செலவு செய்து வாழலாம் என்பது ரோஜரின் விருப்பம்.
Credit: check copyright
ஆனால், கொஞ்ச பணத்தை சந்தோஷமாக செலவிட்டுவிட்டு மீதியை முதலீடு செய்யலாம் என்பது லாராவின் திட்டம்.
ஆனாலும், திட்டமிட்டபடி அவர்கள் வாழவில்லை. துபாய், மஜோர்கா, மொனாக்கோ, நியூயார்க் என பல இடங்களுக்குச் சென்று ஆடம்பர ஹொட்டல்களில் தங்கியிருக்கிறார்கள்.
லாரா, நகைகள், ஆடைகள், வீட்டுக்கான மரச்சாமான்கள், ஒரு கடையே நிரம்பும் அளவுக்கு ஆடம்பர கைப்பைகள் என வாங்கிக் குவிக்க, ரோஜர் விலையுயர்ந்த உடைகள், அழகியல் அறுவை சிகிச்சை என போக, ஆளுக்கொரு கார், 670,000 பவுண்டுகள் வீடு என செலவிட்டதுடன், பெரும் செலவில் ஸ்பா ஒன்றையும் துவக்கியிருக்கிறார்கள் இருவரும்.
Credit: laraTthepaintedlady/facebook
அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டம்
திட்டமிட்டபடி ஸ்பா தொழில் நன்றாகப் போகாமல், வீட்டை அடமானம் வைக்கவேண்டிவந்துள்ளது. மோசமான முதலீடுகளும், தொழில் தோல்வியும் கூடவே துரதிர்ஷ்டமுமாக, கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த இடி, 14 வருட திருமணத்தை காவு வாங்கியிருக்கிறது. ரோஜருடைய கணினியிலிருந்த ஒரு மின்னஞ்சலை தற்செயலாக கவனித்த லாரா, தன் கணவர் ஒரு நண்பரிடம் ஒரு பெண்ணின் மொபைல் எண்ணைக் கேட்டதையும், அந்த நண்பரும் அதை ஊக்குவித்ததையும் தெரிந்துகொண்டிருக்கிறார்.
இந்த விடயம் குறித்துக் கேட்டபோது, வருத்தம் தெரிவிக்காத ரோஜர் வீட்டை விட்டு வெளியேற, கடைசியில் இருவரும் பிரியும் நிலை உருவாகிவிட்டது.
இருவரும் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், வாழ்க்கை தலைகீழாகிவிட்டது. கஷ்டப்பட்டபோது 14 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த தம்பதியர், பணம் வந்த பிறகு, நஷ்டப்பட்டு, பணத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள்.
Credit: SWNS
எல்லாவற்றுக்கும் மேல், தம்பதியரின் பிரிவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார் அவர்களுடைய மூத்த மகளான ரூபி. அவர் தன் தந்தையை சந்திப்பதையே நிறுத்திவிட்டார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |