அவர் என் தாத்தா இல்லை.. ! வருங்கால கணவர்... வயதான நபரை உயிராக நேசிக்கும் அழகிய பெண் சொன்ன காரணம்
தாத்தா - பேத்தி என கிண்டல் செய்யப்படும் காதல் ஜோடி.
இருவருக்கும் இடையே உள்ள பெரிய வயது வித்தியாசம் தான் காரணம்.
பெரியளவிலான வயது வித்தியாசம் கொண்டு காதலில் விழுந்த இருவர் பல்வேறு கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர்.
Cowboy மற்றும் Angel என அறியப்படும் ஜோடி காதலர்கள் ஆவார்கள். இதில் Cowboy வயதானவராகவும், Angel மிக அழகிய இளம்பெண்ணாகவும் இருக்கிறார். இருவரும் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டு வரும் நிலையில் அவர்களை தாத்தா, பேத்தி என பலரும் நினைத்து விடுகின்றனர்.
இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் வைர மோதிரம் Angel விரலில் ஜொலிக்கிறது. அவர் கூறுகையில், வயது என்பது வெறும் எண் தான்..! நாங்கள் இறக்கும் வரை ஒருவர் மீது ஒருவர் உயிருக்கு உயிராக இருப்போம் என கூறினார்.
TikTok
ஜோடியின் புகைப்படங்களுக்கு பல்வேறு விதமான கமெண்டுகள் வருகின்றது. என் தாத்தா என் கையை பிடித்து கொண்ட ஞாபகம் வருகிறது உங்கள் இருவரையும் சேர்ந்து பார்க்கும் போது என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலரோ Angel பணத்துக்காக தான் Cowboy உடன் இருக்கிறார் என குற்றஞ்சாட்டுகின்றனர்.
இன்னும் சிலரின் பதிவில், உங்களின் மகிழ்ச்சியை காண நன்றாக உள்ளது, வயது வித்தியாசத்தை விட்டு தள்ளுங்கள், உங்களை வெறுப்பவர்களின் பேச்சை கேட்காதீர்கள் எனவும் பதிவிடுகின்றனர்.
TikTok