லொட்டரி டிக்கெட்டுகள் விற்று ஒரே நாளில் கோடீஸ்வரரான தம்பதியினர்!
இந்திய மாநிலம் கேரளாவில், பூஜா பம்பர் லொட்டரியின் குலுக்கலில் கணவன், மனைவி ஆகிய இருவரும் தனித்தனியே விற்ற லொட்டரி டிக்கெட்டுகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
பூஜா பம்பர் லொட்டரி
கேரள மாநிலத்தில் வாரத்தில் ஏழு நாள்களும் லொட்டரி குலுக்கல் நடைபெற்று ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதைத்தவிர, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், பருவமழைக்கால பம்பர், ஓணம் மெகா பம்பர், பூஜா பம்பர் என பம்பர் லொட்டரிகளும் விற்கப்படுகின்றன.
அந்தவகையில், ரூ.12 கோடி பரிசுத்தொகை கொண்ட பூஜா பம்பர் லொட்டரிகள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்று வரும் இந்த விற்பனை அதிகரித்து வந்தது.
கேரள தம்பதிகள்
இந்நிலையில், பூஜா பம்பர் லொட்டரி குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில், ரூ.12 கோடி கொண்ட முதல் பரிசை JC 253199 என்ற லொட்டரி வென்றது. இதனை வாங்கியவர் யார் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.
ஆனால், காசர்கோட்டில் பாரத் லொட்டரி ஏஜென்சி என்ற பெயரில் மரிய குட்டி ஜோ (56) என்பவர் விற்ற லொட்டரி டிக்கெட்டுக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது. இவரது கணவர் ஜோஜோ ஜோஷப் (57) விற்பனை செய்த லொட்டரிக்கு 2 -ம் பரிசு கிடைத்துள்ளது.
இதனால், லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்த மரிய குட்டிக்கு ரூ.1.2 கோடியும், கணவர் ஜோஜோ ஜோஷப்க்கு ரூ.10 லட்சமும் கிடைக்கும் என்பதால் தம்பதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். எப்போதும், ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் ரூ.5 ஆயிரம் என கிடைத்த நிலையில் தற்போது பெரிய தொகை கிடைத்துள்ளது.
இவர்கள், 2018 -ம் ஆண்டு முதல் மன்ஜேஸ்வர் பகுதியில் உள்ள மஜீரபல்லா என்ற இடத்தில் சிறிய லொட்டரி கடை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |