பிரான்சுக்கு சுற்றுலா சென்ற தம்பதியர்: காரின் பின்பக்கத்தில் கண்ட அதிரவைக்கும் காட்சி
பிரான்சுக்கு சுற்றுலா சென்று திரும்பிய பிரித்தானிய தம்பதியர், தங்கள் காருக்குள் ஒருவர் ஒளிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பிரான்சுக்கு சுற்றுலா சென்ற தம்பதியர்
பிரித்தானியர்களான Helen Gwynம் அவரது கணவர் Richard Morris Jonesம், பிரான்சுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். Caen என்னுமிடத்தில் காரை நிறுத்தி உணவு வாங்கிவிட்டு, மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்கள் தம்பதியர்.
வேல்ஸ் நாட்டிலுள்ள Caernarfon என்னும் இடத்தை அடைந்தபோது, காரின் பின் பக்கத்தில் பொருட்கள் வைக்கும் இடத்திலிருந்து ஏதோ சத்தம் வருவதை கவனித்த ஹெலன், கணவரிடம் கூறியிருக்கிறார்.
காரின் பின்பக்கத்தில் கண்ட அதிரவைக்கும் காட்சி
காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, என்ன சத்தம் என்று பாருங்கள் என கணவர் ரிச்சர்டிடம் ஹெலன் கூற, ரிச்சர்ட் சென்று காரின் பின் பக்கத்தில் பொருட்கள் வைக்கும் பகுதியைத் திறக்க, அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆம், காரின் பின் பக்கத்தை அவர் திறந்ததும், அதற்குள்ளே ஒரு இளைஞர் இருப்பதைக் கண்டுள்ளார் ரிச்சர்ட். ரிச்சர்டைக் கண்டதும், அந்த இளைஞர் வெளியேறி வேகமாக நடந்து சென்றுள்ளார்.
getty images
தாங்கள் பிரான்சில் உணவு வாங்கச் சென்றபோது, அவர் தங்கள் காரின் பின் பக்கத்தில் பொருட்கள் வைக்கும் இடத்துக்குள் ஏறி மறைந்து உட்கார்ந்திருக்கவேண்டும் என்று தாங்கள் கருதுவதாக தம்பதியர் கூறுகிறார்கள்.
பாவம், யார் பெற்ற பிள்ளையோ, அவருக்கு என்ன பிரச்சினையோ, எப்படியாவது பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிடவேண்டும் என்று இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார் ஹெலன்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |