சுவிட்சர்லாந்தில் பர்கரும் சோடாவும் சாப்பிட்ட சுற்றுலாப்பயணிகள்: பில் எவ்வளவு தெரியுமா?
சுவிட்சர்லாந்தின் அழகால் கவரப்பட்டு அந்நாட்டுக்கு சுற்றுலா சென்ற அவுஸ்திரேலியர்கள் இருவர், ஹொட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட எளிய உணவுக்கு பில்லைப் பார்த்தால், தலைசுற்றிவிட்டதாம் அவர்களுக்கு!
எளிய மதிய உணவு
அவுஸ்திரேலியர்களான மரியாவும் (Maria Antoniou)அந்தோனியும் (Anthony) நான்கு மாத உலக சுற்றுலா புறப்பட்டுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாக அவர்கள் சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தை சுற்றிப் பார்த்துவரும்போது, புகழ் பெற்ற ஆல்ப்ஸ் மலைபப்பகுதியில் அமைந்துள்ள Grindelwald என்னும் கிராமத்துக்குச் சென்றுள்ளார்கள் அவர்கள்.
அந்த கிராமத்தில் ஒரு ஹொட்டலில் மதிய உணவு சாப்பிட முடிவு செய்த ஜோடி, எளிமையாக ஆளுக்கொரு பர்கர், உருளைக்கிழங்கு ஃப்ரை மற்றும் ஆளுக்கொரு சோடா சாப்பிட்டுள்ளார்கள்.
0C2J1P
சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட உணவுக்கான பில்லைப் பார்த்தால், அது 100 டொலர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. அதாவது, இலங்கை மதிப்பில் 19,651.71 ரூபாய்.
சுற்றிப்பார்க்க சுவிட்சர்லாந்து அழகாகத்தான் இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறும் மரியா, ஆனால், செலவு அதிகம். ஆகவே, நிறைய சேமியுங்கள். அதற்குப் பின் சுற்றுலா செல்லுங்கள் என ஆலோசனை கூறுகிறார்.
சமூக ஊடகம் ஒன்றில் மரியா இந்த செய்தியை வெளியிட, தாங்களும் இதேபோன்ற அனுபவங்களைப் பெற்றதாக பலரும் கருத்துக்களை தெரிவித்துவருகிறார்கள்.
நான் ஒரு கப் நூடுல்ஸ் சாப்பிட்டுவிட்டு, 15 டொலர் செலுத்தினேன் என்கிறார் ஒருவர். அதாவது, இலங்கை மதிப்பில் 2,947.76 ரூபாய். மற்றொருவர், நான் Burger King ஹொட்டலிலிருந்து மூன்று சாப்பாடு வாங்கினேன், அதன் விலை 210 டொலர்கள் என்கிறார். அதாவது, இலங்கை மதிப்பில் 41,268.59 ரூபாய்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |