இளைஞரை ஆசை வார்த்தை கூறி வரவழைத்து இளம் தம்பதியின் கொடுஞ்செயல்: லண்டனில் பகீர் சம்பவம்
லண்டனில் பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் இளம் தம்பதியால் துப்பாக்கியால் தாக்கப்பட சம்பவத்தில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நெருக்கமாக இருந்த காணொளி
இதில் 26 வயதான இளைஞரின் உடல் மொத்தமாக முடங்கிப்போயுள்ளது. 23 வயதான டேனியல் கவுடின் என்பவருக்கு உண்மையில் பாதிக்கப்பட்ட இளைஞரை நேரிடையாக அறிமுகம் இல்லை என்றே கூறப்படுகிறது.
Image: Met Police
ஆனால் தமது காதலி ஷானன் ரூல் என்பவர் இன்னொரு நபருடன் நெருக்கமாக இருந்த காணொளியை பார்க்க நேர்ந்த பின்னர் தான், டேனியல் கவுடின் தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 4 நாட்கள் திட்டமிட்டு, சைன்ஸ்பரிக்கு வெளியே அழைத்து வரவும் ரூல் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று குறித்த பகுதியில் வந்த நபரை டேனியல் கவுடின் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், டேனியல் கவுடின் மற்றும் ஷானன் ரூல் ஆகிய இருவருக்கும் மொத்தமாக 57 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குணப்படுத்த முடியாத நிலையில்
நீதிமன்ற விசாரணையில், ரூல் தாம் இன்னொரு நபருடன் நெருக்கமாக இருந்த காணொளியை தமது முன்னாள் காதலருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவர் அந்த காணொளியை டேனியல் கவுடினுக்கு பகிர்ந்துள்ளார்.
Image: Met Police
ஜூன் 19 2021ல் நடந்த இச்சம்பவத்தில் கவுடின் பழி வாங்க திட்டமிட்டு, ஜூன் 22ம் திகதி சைன்ஸ்பரிக்கு வெளியே தாக்குதல் முன்னெடுத்துள்ளார். இச்சம்பவத்தில், தற்போது 26 வயதாகும் நபருக்கு வாழ்நாள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குணப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ரூல் என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் கவுடினுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.