இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்?
மகன் இந்தியாவில் தனியாக வாழ, அவனைப் பிரிந்து பெற்றோர் கனடாவில் தனியாக தவிக்கும் நிலையில், தன் மகனுடைய விண்ணப்பம் ஏன் இன்னமும் பரிசீலிக்கப்படவில்லை என்பது தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள் அவர்கள்.
Nupur மற்றும் Ajay Soin தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணமானது. கனடாவில் ஒரு நல்ல வாழ்வைத் துவங்கலாம் என்ற கனவுடன் பிரிட்டிஷ் கொலம்பியா வந்தார் Ajay.
Nupurக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் பிறந்த Shaurrya என்னும் 15 வயது மகன் இருக்கிறான். Nupur, Ajay ஜோடிக்கு 16 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. Visitor visaவில் Nupur கணவரை சந்திக்க கனடா வந்துவிட்டார்.
ஆனால், அவருக்கும் அவரது மகன் Shaurryaவுக்கும் வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் பதில் கூட கிடைக்கவில்லை. தாயும் தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், அவனது தந்தையும் இறந்துவிட, கொரோனா தொற்று அதிகம் உள்ள டில்லியில் தன் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான் Shaurrya.
Nupur மற்றும் Shaurryaவுக்கு நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், ஏன் பதில் கிடைக்கவில்லை என்பது கூட தெரியாமல் தவித்து வருகிறார்கள் Nupurம் அவரது கணவர் Ajayம்.
தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்று ஒன்லைனில் பரிசோதிக்கும் போதெல்லாம், ‘உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது’ என்றே பதில் வருகிறது. கொரோனா பாதிப்பின் உச்சத்திலிருக்கும் டில்லியிலிருக்கும் தன் மகனையும் தாயையும் நினைத்து நினைத்து தூக்கம் கூட இல்லாமல் தவிக்கிறார் Nupur.
அதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம், மருத்துவரைப் பார்த்து மருந்து வாங்கி
சாப்பிடும் அளவுக்கு அவரைக் கொண்டு போய் விட்டிருக்கிறது.
அடுத்த கட்டம் தெரியாமல் காத்திருக்கிறார்கள் டில்லியில் Shaurryaவும் அவரது
பாட்டியும், கனடாவில் Nupurம் அவரது கணவரும்...