செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறந்த குழந்தை: பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவில், செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார் ஒரு பெண்.
ஆனால், குழந்தையை முதன்முறையாக பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தார்கள்!
செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறந்த குழந்தை
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் வாழும் ஸ்டீவன் (Steven Mills) என்பவரது மனைவியான டிஃபனி (Tiffany Score), செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.

குழந்தையை முதன்முறையாகப் பார்த்த அனைவருமே அதிர்ச்சியடைந்தனர். காரணம், ஸ்டீவன், டிஃபனி இருவருமே வெள்ளை இனத்தவர்கள். பிறந்த குழந்தையோ, வெள்ளையரல்லாத குழந்தை!
ஆக, ஆய்வகத்தில் செயற்கை கருத்தரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஸ்டீவன், டிஃபனி தம்பதியரின் கருவுக்கு பதிலாக வேறு யாரோ ஒருவருடைய கரு டிஃபனியின் கருப்பைக்குள் பொருத்தப்பட்டுள்ளது.
எனவே, கருத்தரிப்பு மையம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள் ஸ்டீவன், டிஃபனி தம்பதியர்.
விடயம் என்னவென்றால், அந்தக் குழந்தையை அவர்கள் வளர்க்க விரும்புகிறார்கள்.

அதே நேரத்தில், அவர்களுடைய உண்மையான குழந்தை வேறு யாரிடமோ வளர்ந்துகொண்டிருக்கலாம்.
அத்துடன், இந்தக் குழந்தையை இவர்கள் பாசத்துடன் வளர்த்துக்கொண்டிருக்கும் நிலையில், திடீரென நாளை யாரோ வந்து, அது தங்கள் குழந்தை என்று கூறி அதை பறித்துக்கொண்டால் தங்களால் அதை தாங்கமுடியாது என்றும் கூறியுள்ள ஸ்டீவன், டிஃபனி தம்பதியர், கருத்தரிப்பு மையம் செய்தது தவறு, ஆகவே, அதன் மீது வழக்குத் தொடர்வது தங்கள் கடமை என தாங்கள் கருதுவதாகவும், அதற்காகவே வழக்குத் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |