விமான விபத்தில் உயிர் பிழைத்த அடுத்த நிமிடம் தம்பதி செய்த செயல்! வைரலாகும் புகைப்படம்
பெரு நாட்டில் விமான விபத்தில் உயிர் பிழைத்த பிறகு நபர் ஒருவர் மனைவியுடன் செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
விமான விபத்தில் உயிர்பிழைக்கும் பயணிகள் பொதுவாக, மிகவும் பீதியடைந்து, யோசிக்க முடியாமல் திணறுவார்கள் அல்லது கடுமையாக காயம்பட்ட நிலையில் எதையும் செய்ய முடியாமல் இருப்பர்கள்.
அவர்களில் பெரும்பாலான மக்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புகொள்வதற்கு அல்லது அவசர அழைப்புகளைச் செய்ய தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துவார்கள்.
செல்ஃபி
ஆனால், இங்கு ஒரு ஜோடி பயங்கரமான விமான விபத்தில் இருந்து தப்பிய பிறகு, செல்ஃபி எடுக்க தங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறு செய்து இணையத்தை கலக்கியிருக்கிறார்கள்.
Twitter@enriquevarsi
புகைப்படத்தில் இருப்பவர் என நம்பப்படும் என்ரிக் வர்சி-ரோஸ்பிக்லியோசி என்ற நபர், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், என்ரிக் தனது மனைவியுடன் முகம் மற்றும் உடல் முழுவதும், தீயை அணைக்க பயன்படுத்தப்படும் வெள்ளை சுண்ணாம்பு இரசாயனத்தால் மூடப்பட்டிருக்கும் போது சிரித்துக் கொண்டு போஸ் கொடுப்பதைக் காணலாம். அவர்கள் அப்போது தான் விபத்தில் இருந்து உயிர் தப்பி வெளிய வந்துள்ளனர்.
இரண்டாவது வாய்ப்பு
அவர் தனது பதிவில், "வாழ்க்கை உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கும் தருணம்" என அந்த புகைப்படத்திற்கு தலைப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் சிலர் அவர்கள் உயிர் பிழைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தனர், மேலும் சிலர் இருவரின் உயிரைப் பறித்த சோகமான நிகழ்வைபதிவு செய்ததற்காக அவர்களைக் கண்டித்தனர்.
Cuando la vida te da una segunda oportunidad #latam pic.twitter.com/Vd98Zu98Uo
— Enrique Varsi-Rospigliosi (@enriquevarsi) November 18, 2022