உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஊருக்கே கறி விருந்து போட்ட தம்பதியினர்
தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வரவேண்டும் என்று தம்பதியினர் ஒருவர் ஊருக்கே கறி விருந்து வைத்துள்ளனர்.
தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக விரைவில் பதவியேற்பார் என்று தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.
சிவகங்கை தம்பதியினர்
இந்நிலையில், சிவகங்கையைச் சேர்ந்த தம்பதியினர் ஒருவர் உதயநிதி துணை முதலமைச்சராக வேண்டுமென்று ஊருக்கே கறி விருந்து வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட, சாலைகிராமத்தை சேர்ந்த கவுன்சிலர் செல்வி சாத்தையா. இவர், தனது மனைவியுடன் சேர்ந்து அன்னதானம் வைத்துள்ளார்.
இதுகுறித்து செல்வி சாத்தையா கூறுகையில், "தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
அவர் துணை முதலமைச்சராகவும், நல்ல மழை பெய்து செழிக்கவும் கிடாய் விருந்து வைத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்கிறேன்" என்றார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |