உயிரிழந்த 7 வயது மகன்..சோகத்தில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டம் கோவையில் வைரஸ் காய்ச்சலால் மகன் உயிரிழந்த துயரத்தில், தம்பதியர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸ் காய்ச்சல்
கோயம்புத்தூர் மாவட்டம் காட்டூர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதி பழனிசாமி, வக்சலா. இவர்களது 7 வயது மகன் விஷ்ணு. இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு வைரஸ் காய்ச்சலுக்கு விஷ்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் பழனிசாமி - வக்சலா தம்பதி மன உளைச்சல் அடைந்துள்ளனர். இதனையடுத்து மகனை இழந்த துக்கத்தில் இருவரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர்.
பிரேத பரிசோதனை
இதுகுறித்து தகவல் அறிந்த காட்டூர் பொலிஸார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் உயிரிழந்த துக்கத்தில் பெற்றோர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |