திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மணமக்கள் அளித்த Return Gift... ஒரு பரிசின் மதிப்பு ஒரு லட்சமாம்
திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டை தம்பதிகள் பரிசாக வழங்கியுள்ளது பேச்சுப் பொருளாகியுள்ளது.
திருமணத்தில் Return Gift
மகாராஷ்டிர மாநிலத்தின் பஹதூர்புரா கிராமத்தில் பெத்கர் குடும்பத்திருமணம் இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது.
இவர்களது கடினமாக குடும்ப சூழ்நிலையில், தங்களது திருமணத்திற்கு வருகை தந்த சுமார் 3500 கிராம மக்களுக்கு விபத்துக் காப்பீட்டை பரிசாக வழங்கியுள்ளனர்.

அதாவது ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு லட்சம் மதிப்பிலான காப்பீடு வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு பின்னால் உள்ள இவர்களின் உணர்வு நெகிழ்ச்சியூட்டுவதாக, 135வது மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி இந்த சம்பவம் குறித்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து தம்பதிகள் கூறுகையில், எங்களது திருமணத்திற்கு வந்த கிராம மக்கள் அனைவருக்கும் விபத்து காப்பீட்டு திட்டங்களை நாங்கள் பரிசாக வழங்கியதாகும், பிரதமர் கவனத்திற்கு சென்ற நிலையில், அவர் வாழ்த்தியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இனியும் திருமணம் செய்பவர்கள் வீண் செலவுகளை தவிர்த்து இவ்வாறு மற்றவர்களுக்கு உதவும் வகையில் சமூக பணிகளை மேற்கொள்வது நாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |