பிரெஞ்சு தம்பதி... பிரித்தானியாவில் தொடர்பு: சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தில் புதிய தகவல்
சுவிட்சர்லாந்தில் 40 பேர்கள் உடல் கருகி பலியான கோர சம்பவம் நடந்த மதுபான விடுதியின் உரிமையாளர்கள் ஒரு பிரெஞ்சு தம்பதி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கோர்சிகா தம்பதி
சுவிட்சர்லாந்தில் விருந்தோம்பல் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களில், மிகவும் மதிப்பு மிக்கவர்கள் இவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1.30 மணியளவில் Le Constellation மதுபான விடுதியின் தரைத்தளத்தில் இந்த கோர தீ விபத்து நடந்துள்ளது. ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதி இது.
இந்த விடுதியின் உரிமையாளர்கள் பிரெஞ்சுத் தீவான கோர்சிகாவைச் சேர்ந்த 49 வயது Jacques Moretti மற்றும் இவரது மனைவியான 40 வயது Jessica என்பவர்கள் என தெரிய வந்துள்ளது.
நாட்டையே மொத்தமாக உலுக்கிய இந்த கோர சம்பவம் குறித்து இவர்கள் தற்போது பல கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர். வேல்ஸில் உள்ள கிளாமார்கன் பல்கலைக்கழகத்தில் ஜெசிகா மோரெட்டி கல்வி பயின்றுள்ளார்.
அத்துடன், மொனாக்கோவில் உள்ள சர்வதேச பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சில் உள்ள மான்ட்பெல்லியர் பிசினஸ் ஸ்கூல் ஆகியவற்றிலும் கல்வியை முடித்துள்ளார்.

இந்த தம்பதியின் இளைய மகனே Le Constellation மதுபான விடுதியின் உண்மையான உரிமையாளர். 2011ல் இந்த தம்பதி கிரான்ஸ்-மொன்டானா நகரத்தில் சுற்றுலாவிற்கு சென்ற நிலையில், அப்பகுதியின் அழகில் ஈர்க்கப்பட்டு, 2015 டிசம்பர் மாதம் Le Constellation மதுபான விடுதியை திறந்துள்ளனர்.
மிக விரைவிலேயே Le Constellation அந்த நகரத்தின் மிகவும் பிரபலமான இரவு நேர கேளிக்கை மையங்களில் ஒன்றாக மாறியது. முக்கியமாக இளம் வயதினர் மற்றும் வசதியானவர்களும் குளிர்கால விளையாட்டு ரசிகர்களும் உள்ளூர்வாசிகளைக் கொண்ட வாடிக்கையாளர் கூட்டமும் அலைமோதியது.

பொதுவாக 18 வயது நிரம்பியவர்களுக்குப் பதிலாக 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களை உள்ளே அனுமதிக்கும் பனிச்சறுக்கு விடுதிகளில் உள்ள ஒரு சில மதுக்கூடங்களில் இதுவும் ஒன்றாகும்.
குறுகிய படிக்கட்டு
இந்த மதுபான விடுதியின் வெற்றியை அடுத்து மோரெட்டி தம்பதி அந்தப் பகுதியில் மேலும் இரண்டு உணவகங்களைத் திறந்து, கடினமாக உழைக்கும் மற்றும் வெற்றிகரமான தம்பதி என்ற நற்பெயரைப் பெற்றனர்.

ஆனால், இந்தத் துயரச் சம்பவத்திற்கான காரணத்தை விசாரிக்கும் அதிகாரிகள், ஒரே ஒரு குறுகிய படிக்கட்டைக் கொண்டிருந்த அந்த அடித்தளம், ஒரு பேரழிவு நிகழ்வதற்காகக் காத்திருந்த ஒரு இடமாக இருந்ததா என்பது குறித்து தற்போது விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மூடிய அந்த இடத்திற்குள் தீ வேகமாகப் பரவியதால், ஒரே ஒரு வெளியேறும் வழியை அடைய ஏற்பட்ட நெரிசலில் சிக்கியே பலர் மரணமடைந்ததாக நம்பப்படுகிறது. அதாவது தீ பரவியதும் வெறும் 30 நொடிக்குள் 200 பேர்கள் மொத்தமாக உயிர் தப்ப முயன்றுள்ளனர்.

மட்டுமின்றி, மதுபானங்களைப் பரிமாறுவதை ஒரு நாடகத்தனமான நிகழ்ச்சியாகக் காட்டுவதற்காக, அந்த இடம் பட்டாசுகளைப் பயன்படுத்தியது எவ்வளவு பொருத்தமானது என்பது குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படும்.
மேலும், பிரபலமான Wheree இணையதளத்தில் பத்தில் 6.5 பாதுகாப்பு மதிப்பெண்ணை மட்டுமே Le Constellation பெற்றுள்ளதாகவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தீ விபத்தின்போது ஜெசிகா மோரெட்டி அந்த விடுதியில் பணியாற்றி வந்ததாகவும், காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |