கனடாவில் இந்த பகுதியில் லொறி ஓட்டுநர்கள் போராட்டத்திற்கு தடை: நீதிபதி அதிரடி உத்தரவு
கனடாவில் தடுப்பூசிக்கு எதிராக லொறி ஓட்டுனர்களின் போராட்டத்திற்கு தடைவிதித்து ஒண்டாரியோ நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கனடாவில், லொறி ஓட்டுனர்களுக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம் என கனடா பிரதமர் Justin Trudeau தெரிவித்ததை தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது.
இதனை தொடர்ந்து லொறி ஓட்டுனர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் இணைந்து டெட்ராய்ட் மற்றும் வின்ட்சர் ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ள Ambassador பாலத்தை முற்றுகையிட்டு கடந்த திங்கள்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தினால் கனடாவில் ஆட்டோமோட்டிவ் தொழிலில் 100 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதை தொடந்து, பிளான்டிஎபி ஆட்டோமோட்டிவ் பார்ட்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த 10ம் திகதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஒன்டாரியோ நீதிபதி, தடுப்பூசிக்கு எதிராக லொறி ஓட்டுனர்கள் வட அமெரிக்காவின் பரபரப்பான எல்லைப்பகுதியான Ambassador பாலத்தில் போராட்டம் நடத்துவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.
இந்த தடையானது வரும் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியில் இருந்து அமல்படுத்தப்படும் எனவும் அதற்குள் அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறும் உத்தரவிட்டுள்ளார்.