கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம்... ஜேர்மனியில் சிறுமிகள் இருவரை கத்தியால் குத்திய புலம்பெயர் நபர்

Asylum Seeker Crime Migrants
By Arbin Jul 04, 2023 07:59 PM GMT
Report

தெற்கு ஜெர்மனியில் நீதிமன்றம் ஒன்று, சிறுமிகள் இருவரை கத்தியால் கொடூரமாக தாக்கிய எரித்திரியா புலம்பெயர் நபருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஜேர்மனியில் புலம்பெயர்ந்தவர்

குறித்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் 14 வயது சிறுமி பரிதாபமாக பலியானார். அவரது 13 வயதான தோழி ஆபத்தான நிலையில், காயங்களுடன் உயிர் தப்பினார். தொடர்புடைய சம்பவமானது Illerkirchberg நகரில் கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது.

கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம்... ஜேர்மனியில் சிறுமிகள் இருவரை கத்தியால் குத்திய புலம்பெயர் நபர் | Court Life Imprisonment Stabbing Two Girls @reuters

இதில் Ece என்ற 14 வயது சிறுமி, உடல் முழுவதும் 23 கத்திக் குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர் எரித்திரியா நாட்டவரான 27 வயது Okba B என்பதும், இவர் 2015ல் ஜேர்மனியில் புலம்பெயர்ந்தவர் எனவும் தெரியவந்தது.

சம்பவத்தன்று உள்ளூர் குடிவரவு அலுவலகத்தில் பயன்படுத்த நினைத்து மறைவாக வைத்திருந்த கத்தியை சிறுமிகள் பார்த்த நிலையில் அவர்கள் மீது பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

எதியோப்பாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த Okba B, குடிவரவு அலுவலகத்தில் கடவுச்சீட்டு கோரியிருந்த நிலையில், தாமதமானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அதிகாரிகள் மீது தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளார்.

நடந்த சம்பவத்திற்கு வருத்தம்

இந்த நிலையிலேயே சிறுமிகள் மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்துள்ளார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள Okba B, 15 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம்... ஜேர்மனியில் சிறுமிகள் இருவரை கத்தியால் குத்திய புலம்பெயர் நபர் | Court Life Imprisonment Stabbing Two Girls @reuters

மேலும், தாக்குதல் சம்பவத்திற்கு முன்னர், கடந்த நவம்பர் மாதம் வரையில் Okba B நாளும் வேலைக்கு செல்பவர், ஜேர்மன் மொழி அறிவு மற்றும் அமைதியான நபர், சாதாரணமாக ஜேர்மன் சமூகத்தில் ஒருவராகவே காணப்பட்டும் வந்துள்ளார் என நீதிமன்ற விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள Okba B, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். Okba B பெற்றுள்ள ஆயுள் தண்டனை மீது மேல்முறையீடு செய்யலாம் எனவும், ஆனால் தண்டனை உறுதி செய்யப்பட்டால், தண்டனை காலத்திலேயே அவர் நாட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என சட்டத்தரணிகள் கூறுகின்றனர்.

இந்த வழக்கானது ஜேர்மனியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனால் குடியேற்ற எதிர்ப்புக் குழுக்களால் அரசியல் ரீதியாக சுரண்டப்படுவதை விரும்பவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மட்டுமின்றி, கொல்லப்பட்ட சிறுமி துருக்கி வம்சாவளியை சேர்ந்த ஜேர்மானியர் என்பது குறிப்பிடத்தக்கது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US