பிரான்ஸ் ஆசிரியர் படுகொலை: நாட்டையே உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய முடிவு

By Balamanuvelan Dec 09, 2023 08:00 AM GMT
Report

பிரான்சில் 13 வயது மாணவி சொன்ன ஒரு பொய், ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட காரணமாக அமைந்ததுடன், உலக நாடுகளில் பலவற்றிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தலைவெட்டி கொலை செய்யப்பட்ட ஆசிரியர்

பாரீஸ் பள்ளி ஒன்றில், வரலாறு பாடவேளையின்போது Samuel Paty என்ற ஆசிரியர், தான் முகமது நபியின் நிர்வாணப் படங்களை காட்ட இருப்பதாகவும், இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்றும் கூறியதாக ஒரு 13 வயது மாணவி தன் தந்தையிடம் சென்று கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து, பத்து நாட்களுக்குப் பின் Samuel Paty தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டார். அவரைக் கொன்ற Abdullakh Anzorov என்ற தீவிரவாதியும் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டான். 

பிரான்ஸ் ஆசிரியர் படுகொலை: நாட்டையே உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய முடிவு | Court Major Decision In French Teacher Murder CaseBertnard Guay/Pool via Reuters

மாணவி சொன்ன பொய்... படுகொலையில் முடிந்த பயங்கரம் 

அந்த மாணவி வகுப்புக்கு அவ்வப்போது மட்டம் போட்டதால், ஆசிரியர் அவளை சஸ்பெண்ட் செய்துள்ளார். அது அவளது தந்தைக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு பொய் சொல்லி கவனத்தை வேறு பக்கம் திருப்ப முயன்றுள்ளாள் அந்த மாணவி.

அதற்காக, தனது வரலாற்று ஆசிரியர் தான் முகமது நபியின் நிர்வாணப் படங்களை காட்ட இருப்பதாகவும், இஸ்லாமிய மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம் என்றும் கூறியதாக தன் தந்தையிடம் சென்று பொய் சொல்லியிருக்கிறாள் அந்த பெண். 

மகள் சொல்லியதை நம்பிய அவளது தந்தையான Brahim Chnina (48), ஆசிரியர் Samuel Patyக்கு எதிராக பேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டதுடன், அவர் மீது பள்ளியிலும், பொலிசாரிடமும் புகாரும் அளித்துள்ளார்.

பிரான்ஸ் ஆசிரியர் படுகொலை: நாட்டையே உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய முடிவு | Court Major Decision In French Teacher Murder CaseFrançois Lo Presti/AFP/Getty Images

சமூக ஊடகங்களில் பரவிய இந்த செய்திகள், தீவிரவாத எண்ணம் கொண்ட செசன்ய அகதியான Abdoullakh Anzorov (18) என்பவனைச் சென்றடைய, அவன் ஆசிரியர் Samuel Patyயை தலையை வெட்டிக் கொன்றுவிட்டான். அவனை பொலிசார் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.

ஆனால், அந்த வகுப்பிலிருந்த மாணவ மாணவிகள் பலரும், ஆசிரியர் கார்ட்டூன்கள் குறித்து கூறும்போது அந்த மாணவி வகுப்பிலேயே இல்லை என்றும், ஆசிரியர் யாரையும் வகுப்பை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தவில்லை என்றும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்கள். ஆக, அந்த மாணவி சொன்னது பொய் என பின்னர்தான் தெரியவந்தது.

பிரான்ஸ் ஆசிரியர் படுகொலை: நாட்டையே உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் முக்கிய முடிவு | Court Major Decision In French Teacher Murder Case

வழக்கில் முக்கிய திருப்பம்

இந்த வழக்கில் தற்போது அந்த மாணவி உட்பட, ஆறு பதின்ம வயதினர் குற்றவாளிகள் என பிரான்ஸ் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் Samuel Patyயை தலையைத் துண்டித்துக் கொலை செய்த Abdoullakh Anzorovக்கு அவரை அடையாளம் தெரியாது. ஆகவே, அந்த மாணவி படித்த அதே பள்ளியில் படித்த 14, 15 வயதுடைய ஐந்து மாணவர்கள், ஆசிரியரை Abdoullakh Anzorovக்கு அடையாளம் காட்டிக்கொடுத்திருக்கிறார்கள். பதிலுக்கு அந்த மாணவர்களுக்கு அவர் 300 முதல் 350 யூரோக்கள் பணம் கொடுத்திருக்கிறார்.

ஆக, அந்த மாணவி, ஆசிரியரை அடையாளம் காட்டிக்கொடுத்த மாணவர்கள் என மொத்தம் ஆறுபேர் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று முடிவு செய்துள்ளது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    


8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US