நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு உத்தரவு
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது.
ஆவணப்படம்
சமீபத்தில் 'நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்' என்ற ஆவணப்படம் வெளியானது.
இதன் முன்னோட்டத்தில் நானும் ரௌடிதான் திரைப்படத்தின் சில வினாடி காட்சி இடம்பெற்றிருந்ததால், அதற்காக இழப்பீடு வேண்டும் என, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
பின்னர் நயன்தாராவுக்கு எதிராக தனுஷின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பதிலளிக்க உத்தரவு
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், நெட்பிளக்ஸ் நிறுவனத்திற்கு வழக்கு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதேபோல் இந்த பதில் மனுக்களுக்கு தனுஷ் தரப்பிலும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது, ஜனவரி 8ஆம் திகதி இறுதி விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |