விசாரணைக்கு ஆஜராகாததால் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்த நீதிமன்றம்
அவதூறு வழக்குக்காக லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ரூ.200 அபராதம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எம்பி கடந்த 2022 ஆண்டில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.
அப்போது, 2022 டிசம்பர் 17 -ம் திகதி அன்று மகாராஷ்டிர மாநிலத்தின் அகோலாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.

சிவாஜி கணேசன் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை, அது நடிகர் பிரபு பெயரில் உள்ளது: ஜப்தி உத்தரவுக்கு ராம் குமார் பதில்
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, வீர சாவர்க்கர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார்.
பின்னர், ராகுல் காந்தி மீது அவதூறு கருத்து தெரிவித்ததற்காக வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்கு நேற்று (மார்ச் 5) ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் கூறியது.
ஆனால், லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் ராகுல்காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 14-ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |