கணவனுடைய கடன் மனைவி தலையில்... முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு
Court ruling could change controversial Vaud rule: சுவிஸ் மாகாணமொன்றில் நடைமுறையில் இருந்த சர்ச்சைக்குரிய விதி ஒன்று தொடர்புடைய வழக்கொன்று நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், அதன் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தின் வாட் மாகாணத்தில், சர்ச்சைக்குரிய விதி ஒன்று பயன்பாட்டில் இருந்தது.
கணவனுடைய கடன் மனைவி தலையில்...
அதாவது, திருமணமான தம்பதியர், தங்கள் இருவரின் மொத்த வருமானத்தையும் கணக்கிட்டு அதற்கு வரி செலுத்தவேண்டும்.

அந்த தம்பதியர் விவாகரத்து செய்து பிரிந்தாலோ, அந்தக் கணவன் கட்டாமல் விட்ட மொத்த வரியும் மனைவி தலையில் வந்து விழுந்துவிடும்.
இந்த சர்ச்சைக்குரிய விதி கடந்த ஆண்டு ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், விதி ஒழிக்கப்படும் முன், அதாவது, ஜனவரி மாதத்துக்கு முன் பிரிந்தவர்கள், கணவனின் வரியைச் செலுத்தியே தீரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அந்த வரிகள் காரணமாக அவர்கள் இன்னமும் கடனில் உள்ளார்கள். அதிகாரிகள் வரி செலுத்தும்படி அவர்கள் பின்னாலேயே துரத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கு
இந்நிலையில், இரண்டு பெண்கள் இந்த விடயத்தை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அந்த வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், வழக்கில் அந்தப் பெண்களுக்கு சாதகமான தீர்ப்பு வருமானால், அது, பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் கடன்களிலிருந்து விடுபட உதவியாக இருக்கும் என்பதால், அந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்காக கருதப்படுகிறது.