சுவிட்சர்லாந்தில் தேவையை விட அளவுக்கதிகமான பெரிய வீடுகளில் குடியிருப்போருக்கு சிக்கல்
சுவிஸ் பெடரல் நீதிமன்றத்தில் தீர்ப்பு ஒன்று, சுவிட்சர்லாந்தில் தேவையை விட அளவுக்கதிகமான பெரிய வீடுகளில் குடியிருப்போருக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.
ஆறு படுக்கையறை வீட்டில் ஒரே ஒரு பெண்
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில், ஆறு படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டில் ஒரே ஒரு பெண்மணி வாழ்ந்துவருகிறார்.
சூரிச்சில், பெரிய வீடுகளில் ஒன்றிரண்டு பேர் மட்டும் வாழ்வதற்கெதிராக விதிகள் உள்ளன.
அந்த விதிகள் அமுலுக்கு வந்தபோது, அவற்றால் சுமார் 5,000 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவரவர் தேவைக்கேற்ற அளவிலான வீடுகளுக்கு அவர்கள் மாறிச் சென்றார்கள்.
ஆனால், ஆறு படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டில் வயதான ஒரு தம்பதியர் வழ்ந்துவந்தார்கள். அவர்கள் அந்த வீட்டில் 1995ஆம் ஆண்டு முதல் வாழ்ந்துவந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண்ணின் கணவர் இறந்துபோனார்.
ஆனால், அந்த வீட்டிலிருந்து வெளியேற அந்தப் பெண் மறுத்துவிட்டார்.
மாகாண அதிகாரிகள் அந்தப் பெண்ணுக்கெதிராக பெடரல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். நீதிமன்றமும் அவர் வெளியேறவேண்டும் என தீர்ப்பளித்துவிட்டது.
விடயம் என்னவென்றால், அந்தப் பெண் இப்போது அந்த வீட்டை விட்டு வெளியேறியாகவேண்டும். அது மட்டுமல்ல, அவரைப்போலவே, தேவையை விட அளவுக்கதிகமான பெரிய வீடுகளில் குடியிருக்கும் மற்றவர்களுக்கும் பெடரல் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சிக்கலை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |