சட்டையில் பட்டன் போடாமல் வந்த வக்கீலுக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்
சட்டையில் பட்டன் போடாமல் ஆஜரான வழக்கறிஞருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சிறை தண்டனை
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் அசோக் பாண்டே என்ற வழக்கறிஞர் பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டில் வழக்கு ஒன்றில் ஆஜரான போது சட்டையில் பட்டன் அணியாமல் வந்துள்ளார். அப்போது உடனே அவரை நீதிபதிகள் வெளியே போக சொன்னார்கள்.
ஆனால், அவர்களை குண்டர்கள் என்று அசோக் பாண்டே வசைபாடினார். இதனால் உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் அசோக் பாண்டேவுக்கு, நீதிபதிகள் விவேக் சவுத்ரி, பி.ஆர்.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, 6 மாத சிறைத்தண்டனையும், ரூ.2 அயிரம் அபராதமும் விதித்துள்ளது.
இதில் அவர் அபராதம் செலுத்தாவிட்டால் கூடுதல் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
லக்னோ மாஜிஸ்திரேட்டு முன்பு சரணடைய அவருக்கு 4 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதோடு வக்கீல் தொழில் செய்ய ஏன் தடை விதிக்கக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |