கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணை தொடரும் சர்ச்சை! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணான லீனா மணிமேகலை தொடர்பில் இந்திய நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கனடாவின் ரொறன்ரோவில் ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையில் ரிதம்ஸ் ஆஃப் கனடா என்ற திருவிழா நடைபெற்து. இதன் ஒரு பகுதியாக சுயாதீன பட இயக்குநர் லீனா மணிமேகலை காளி என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது. போஸ்டரில் காளி வேடத்தில் இருக்கும் லீனா, கையில் சிகரெட்டுடன் இருக்கிறார். இதனையடுத்து இந்துக்கடவுள்களை அவர் இழிவுபடுத்திவிட்டதாக சர்ச்சை எழுந்தது. அரஸ்ட் லீனா மணிமேகலை என்ற ஹேஷ்டேக் சமூக வலைங்களில் டிரெண்டானது.
பின்னர் லீனா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம் என பதிவிட்டிருந்தார்.
அவர் மீது பொலிசாரும் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி லீனா மணிமேகலைக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ராஜ் கௌவுரவ், இந்து கடவுளை இழிவுபடுத்தி வார்த்தையால் கூற முடியாத அளவிற்கு லீனா மணிமேகலை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், படத்தின் போஸ்டரில் கடவுள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இவை மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக வாதத்தை முன்வைத்தார். அப்போது நீதிபதி அபிஷேக் குமார் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என காளி திரைப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை மற்றும் அவரின் தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
விடாது கருப்பாய் லீனாவை சர்ச்சை தொடரும் நிலையில் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த லீனா மணிமேகலை கனடாவின் ரொரன்றோவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.