ஜெனீவா பள்ளிகளில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் விவகாரம்: நீதிமன்றத்தின் முடிவு
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள பள்ளிகளில் வெளிநாட்டு மாணவ மாணவிகளை சேர்ப்பது தொடர்பான விவகாரம் தொடர்பில் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார்கள்.
ஜெனீவா பள்ளிகளில் வெளிநாட்டு மாணவர்கள்...
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரில் சுமார் 2,500 பேர் ஜெனீவா மாகாணத்தில் வாழ்பவர்கள் அல்ல.
உண்மையில், அவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிலிருந்து வந்து ஜெனீவாவில் படிப்பவர்கள்.

இந்நிலையில், பள்ளிகளுக்கு வேலைப்பழு அதிகம் இருப்பதாகவும், கடும் அழுத்தம் உருவாகியுள்ளதாகவும் கூறி, இனி, ஜெனீவாவுக்கு வெளியே இருந்து வரும் மாணவ மாணவியரை ஜெனீவா பள்ளிகளில் சேர்ப்பதில்லை என சமீபத்தில் ஜெனீவா மாகாண கவுன்சில் முடிவு செய்தது.
ஜெனீவா மாகாண கவுன்சிலின் முடிவுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடர்ப்பட்டன.
என்றாலும், ஜெனீவா மாகாண கவுன்சில் தன் முடிவிலிருந்து மாறமுடியாது என உறுதியாக தெரிவித்துவிட்டது.
நீதிமன்றத்தின் முடிவு
இந்நிலையில், ஜெனீவா மாகாண கவுன்சிலின் முடிவை எதிர்த்து 12 பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் சார்பில் சமீபத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கில், பிப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில், பிரான்ஸ் நாட்டு மாணவர்களின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்கள்.
வெளிநாட்டு மாணவர்களை ஜெனீவா பள்ளிகளில் சேர்ப்பதால் பள்ளிகளுக்கு அழுத்தமும் பட்ஜெட் பிரச்சினைகளும் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளதை மேற்கோள் காட்டியுள்ள நீதிபதிகள், மாகாண கவுன்சில் சட்டப்படிதான் நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |