இன்று முதல் இந்த நாட்டுக்குச் செல்லும் கனேடியர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும்
இன்று (ஜனவரி 22) முதல், அமெரிக்காவுக்குள் நுழையும் அனைத்துக் கனேடியர்களும் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அமெரிக்கா செல்லும் அனைத்து கனேடியர்கள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் அல்லாதோர், முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தால்தான் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக பயணித்தாலும் சரி, அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக பயணித்தாலும் சரி, அமெரிக்காவுக்குள் நிலம் வழியாகவோ, கப்பல்கள் மூலமாகவோ நுழைய விரும்பும் பட்சத்தில், அவர்கள் தாங்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டியிருக்கும்.
இந்த கட்டுப்பாடுகள் அமெரிக்கக் குடிமக்களுக்கோ, அமெரிக்க நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களுக்கோ கிடையாது.
அதேபோல், அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள், மற்றும் அமெரிக்க வாழிட உரிமம் பெற்றிராதவர்கள், விமானத்தில் பயணிப்பதற்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.