பிரான்சில் கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு: அடுத்த அலையா?
A rise in Covid-19 cases is being recorded in France: பிரான்சில் கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.
பிரான்சில், கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, செப்டம்பர் மாத துவக்கம் முதல் அதிகரித்தவண்ணம் உள்ளது. அத்துடன், அது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை
இந்த விடயம், அதாவது, கோவிட் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

விடயம் என்னவென்றால், இது புதிய கோவிட் அலை அல்ல, அது குறித்து மக்கள் அச்சப்படவேண்டாம் என்கிறார்கள் அதிகாரிகள்.
ஏனென்றால், கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வந்ததிலிருந்தே, கோவிடும் ப்ளூ தொற்று போல மாறிவிட்டது.
அதாவது, அதன் வீரியம் குறைந்துவிட்டது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ப்ளூ குளிர்காலத்தில் மட்டும் தாக்கும், இந்த கோவிட் வெயில் காலத்திலும் தாக்கக்கூடும், அவ்வளவுதான்!
ஆரோக்கியமான இளம் மற்றும் நடுத்தர வயதினர் இந்த கோவிட் குறித்து கவலைப்படவேண்டியதில்லை. எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலுள்ளவர்கள் மற்றும் முதியவர்களும் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளதால் அவர்களுக்கும் பாதுகாப்பு இருக்கும்.
ஆக, எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலுள்ளவர்கள் கூட்டம் அதிகமிருக்கும் இடங்களுக்கு செல்லும்போது கையுறை, முகக்கவசம் போன்றவற்றை அணிந்துகொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் அதிகாரிகள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |