பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பயணிப்பதற்கான தற்போதைய விதிமுறைகள்
பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பயணிப்பதற்கான தற்போதைய விதிமுறைகள்
பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு பயணிப்பதற்கான விதிமுறைகள்:
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கான விதிமுறைகள்
முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் பிரித்தானியவிலிருந்து பிரான்ஸ் வர எந்த தடையும் இல்லை.
நீங்கள் பிரான்ஸ் வர அத்தியாவசிய காரணமோ, பிரான்ஸ் வந்ததும் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமோ இல்லை. ஆனால், நீங்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தையும் நீங்கள் கொரோனா தொற்றுடைய யாருடனும் தொடர்பில் இல்லை, மற்றும் உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதைக் கூறும் சுய விளக்க அறிக்கையையும் சமர்ப்பிக்கவேண்டும்.
முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களுக்கான விதிமுறைகள்
அத்தியாவசிய காரணம் இருந்தால் மட்டுமே நீங்கள் பிரான்சுக்குள் வரலாம்
தடுப்பூசி பெறாதவர்களுக்கான விதிமுறைகள்
தடுப்பூசி பெறாதவர்கள் பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் வரவேண்டுமானால், நீங்கள் பயணம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் செய்துகொண்ட கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் ஆதாரத்தை சமர்ப்பிக்கவேண்டும்.
இந்த விதி 12 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு கிடையாது. அத்துடன், நீங்கள் கொரோனா தொற்றுடைய யாருடனும் தொடர்பில் இல்லை, மற்றும் உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்பதைக் கூறும் சுய விளக்க அறிக்கையையும் சமர்ப்பிக்கவேண்டும்.
கூடவே, ஒரு வாரம் உங்களை தனிமைப்படுத்திக்கொள்வீர்கள் என்பதற்கான உறுதிமொழியும் அதில் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு இடத்தில், நீங்களாகவே ஏழு நாட்களுக்கு உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். பிறகு, ஒரு பிசிஆர் பரிசோதனை செய்து உங்களுக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தால், நீங்கள் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேறலாம்.