பிரான்சில் 3-வது கொரோனா தடுப்பூசி உறுதி! யார் யாருக்கெல்லாம போடப்படும்: ஜனாதிபதி மேக்ரான் அறிவிப்பு
பிரான்சில் கொரோனாவிற்கான மூன்றாவது தடுப்பூசி போடப்படுவது குறித்து ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது பல்வேறு வடிவங்களில் உருமாறி பரவ துவங்கியுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் ஒரு சில நாடுகள் இரண்டு கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து, மூன்றாவது தடுப்பூசியையும் போட முடிவு செய்துள்ளது.
அதில், பிரான்சும் ஒன்று, இது குறித்து ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், வரும் புதிய கல்வி ஆண்டில் இருந்து மூன்றாவது தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகும்.
ஆனால் இந்த மூன்றாவது தடுப்பூசி அனைவருக்கும் கிடையாது. எளிதில் தொற்றுக்கு ஆளாகக்கூடிய, எதிர்ப்பு சக்தி இல்லாத முதியவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.