பிரித்தானியாவில் குழந்தைகளை அதிகம் பாதித்த கொரோனா! UKHSA தகவல்
பிரித்தானியாவில் ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலான குழந்தைகளில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது என UKHSA தரவு காட்டுகிறது.
பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம்(UKHSA) இந்த வார கொரோனா கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், ஐந்து முதல் ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக காட்டுகிறது.
அதேசமயம், 70 முதல் 79 வயதுடையவர்களில் கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பதாக UKHSA அறிக்கை காட்டுகிறது.
பாதிப்பு விகிதங்கள் நாட்டின் வடகிழக்கில் அதிகமாகவும் தென்மேற்கில் குறைவாகவும் இருப்பதாகவும் UKHSA கண்டறிந்துள்ளது.
எனினும், வடக்கு கிழக்கிலும் இந்த வாரத்தில் அதிகளவானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என UKHSA அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.