பிரித்தானியாவில் இந்த 97 பகுதிகளில் கொரோனா வழக்குகள் திடீர் அதிகரிப்பு! வெளியான முழு விபரம்
பிரித்தானியாவின் இங்கிலாந்தில் உள்ள 97 இடங்களில் கொரோனா வழக்குகள் கடந்த ஒரு வாரத்தில் 6 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடுத்த மாதம் இறுதிகட்டத்தில், பிரித்தானியா முழுவதும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தவிருக்கிறார்.
ஆனால், இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. புள்ளி விவரங்களின் படி பார்த்தால், கடந்த ஒரு வாரத்தில் புதிய வழக்குகள் அதிகரித்துள்ளது,
இங்கிலாந்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நகரங்கள் பின் தங்கி வருவதாக, சமீபத்திய தரவு காட்டுகிறது. கடந்த வாரம் திங்கள் முதல் ஏழு நாட்களில் 64 சதவீத இடங்கள் தொற்று வீதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இங்கிலாந்தில் மிக மோசமான ஹாட்ஸ்பாட்களில் Bolton, Blackburn மற்றும் Bedford ஆகியவை உள்ளன. கடந்த ஏழு நாட்களில் இங்கிலாந்தில் 16,743 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.
இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து பிரதமர் போரிஸ்ஜோன்சன் இன்று, இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால், அதே சமயம் வரும் ஜுன் 22-ஆம் திகதிக்கு பின் தளர்வுகள் நீட்டிக்கப்படும் எண்ணம் இல்லை என்பது போலும், இந்த மாத இறுதிக்குள் முடிந்தவரை "அதிகமான தகவல்களை தருவதாகவும் கூறினார்.
மேலும், இந்த மாத இறுதிக்குள், எங்களால் முடிந்தவரை மக்களுக்கு அனைத்து தகவல்களையும் தெரிவிப்போம் என்று குறிப்பிட்டார்.
வாரத்தில் மிகப்பெரிய உயர்வுகளைக் கொண்ட ஐந்து பகுதிகள்
Bolton ( 225.0 to 384.6)
Blackburn with Darwen (108.2 to 187.0)
Bedford (102.7 to 142.0)
Bury (18.8 to 46.1)
North Tyneside (25.0 to 51.5)
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்திலும் பரவி வருவதால், இங்கு R விகிதம் 0.9-ல் இருந்து 1.1-ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் சமீப நாட்களில் கொரோனா பரவல் அதிகமாகிய பகுதிகள்














