பிரித்தானியாவில் கொரோனா இறப்பு வீதம் 16 மடங்கு குறைந்துள்ளது: ஆறுதலளிக்கும் ஒரு செய்தி

covid uk
By Balamanuvelan Jul 19, 2021 12:24 PM GMT
Report

பிரித்தானியாவில் தற்போது நாளொன்றிற்கு 45,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் சராசரியாக 40 பேர் கொரோனாவுக்கு பலியாகிறார்கள்.

கேட்பதற்கு அதிர்ச்சியளிக்கும் தகவலாகத்தான் இது தோன்றுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், கடந்த டிசம்பரில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசியபோது நாளொன்றிற்கு 640 பேர் பலியானார்கள்.

அப்படி பார்த்தால், இப்போது இறப்பு வீதம் 16 மடங்கு குறைந்துள்ளது. அத்துடன், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த அலையை ஒப்பிடும்போது, நான்கு மடங்கு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று 50,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டபோது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,800. இப்போது அது வெறும் 614 மட்டுமே. கொரோனாவால் உயிரிழப்போரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரும் இருந்தாலும், இப்போதைய தொற்று, முதல் மற்றும் இரண்டாவது அலைகளின்போது மருத்துவமனைகளுக்கு கொடுத்த அழுத்தம் போல் இம்முறை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் கொரோனா இறப்பு வீதம் 16 மடங்கு குறைந்துள்ளது: ஆறுதலளிக்கும் ஒரு செய்தி | Covid Death Rate 16 Times Lower Second

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரில் பெரும்பாலானோரும் இளைஞர்கள் மற்றும் தடுப்பூசி பெற்றவர்கள்தான்.

அதாவது நோய் மிதமாகத்தான் உள்ளது என்பதையே இது காட்டுகிறது, அத்துடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கால அளவும் முந்தைய அலைகளை விட குறைந்துள்ளது. பிரித்தானியாவின் தடுப்பூசி திட்டத்தின் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நல்ல செய்திதான்!  

பிரித்தானியாவில் கொரோனா இறப்பு வீதம் 16 மடங்கு குறைந்துள்ளது: ஆறுதலளிக்கும் ஒரு செய்தி | Covid Death Rate 16 Times Lower Second

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US