கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானியா மகாராணி... பிரபல நாட்டிற்கு அனுப்பிய இரங்கல் செய்தி!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத், பிரபல தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
95 வயதான பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
லேசான சளி அறிகுறிகளுடன் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், மிக அவரசமான பணிகளில் மட்டும் மகாராணி கவனம் செலுத்துவார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் மகாராணி உத்தியோகபூர்வ பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் அமெரிக்கா நாடான பிரேசிலுக்கு மகாராணி இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
திங்களன்று பிரேசில் அதிபருக்கு மகாராணி அனுப்பிய இரங்கல் செய்தியில், பெட்ரோபோலிஸ் நகரில் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவு மற்றும் 175க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
உறவினர்களை, நேசித்தவர்களை மற்றும் வீடுகளை இழந்தவர்கள், அத்துடன் அவசரகால் சேவைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக பணியாற்றும் அனைவருக்காகவும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இருக்கின்றன என மகாராணி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.