பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விலகல்! காரணம் என்ன?
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து 3 வீரர்கள் விலகியதை வெஸ்ட் இண்டீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி டிசம்பர் 9ம் திகதி பாகிஸ்தானின் கராச்சிக்கு வந்தடைந்தது.
கராச்சி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் வந்தவுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
Chase, Cottrell and Mayers unavailable for T20I Series in Pakistan after COVID-19 positive tests | Read More: https://t.co/bYHZ27FrrL
— Windies Cricket (@windiescricket) December 11, 2021
பந்து வீச்சாளர் Sheldon Cotrell, ஆல்-ரவுண்டர்கள் Roston Chase மற்றும் Kyle Mayers மற்றும் அணி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து, நான்கு பேரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்று உறுதியான நான்கு பேரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் அவர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லை. தற்போது அவர்கள் 10 நாள் சுய தனிமைப்படுத்தலில் இருப்பார்கள், பின்னர் அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மற்ற வீரர்களுக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளதால் திட்டமிட்ட படி பாகிஸ்தான் உடனான போட்டிகள் நடைபெறும்.
கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது முற்றிலுமாக கொரோனா தொற்றின் அபாயத்தை தவிர்ப்பது முடியாத ஒன்று என வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிட்டுள்ளது.