எதிர்வரும் காலங்களில் கொரோனா வைரஸின் வீரியம் எப்படி இருக்கும்? ஆக்ஸ்போர்டு பேராசிரியர் முக்கிய தகவல்
எதிர்காலத்தில் கொரோனா நோய்த்தொற்றுகள் கவலைக்குரியதாக இருக்காது, ஏனெனில் தொற்று மிகவும் மிதமாக தான் இருக்கும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Jeffrey Almond தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் குளிர்காலத்தில் கொரோனா அலை தாக்கக்கூடும் என்றாலும், தலைவலி, காய்ச்சல் போன்ற பொதுவான தொற்று நோயுடன் வாழ்வது போல கொரோனாவுடன் வாழ்வோம் என biotech நிறுவனமான Osivax-ல் அறிவியல் ஆசோசனைக் குழுவின் தலைவரும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியருமான Jeffrey Almond தெரிவித்துள்ளார்.
முதல் அலை மிகவும் தீவிரமாக இருந்தது ஏரளானமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
பின் அதே வைரஸ் சில மாறுபாடுகளுடன் தொடர்ந்து பரவியது, எனினும் குறைவான மக்களையே பாதித்தது மற்றும் குறைவான இறப்புகளை ஏற்படுத்தியது.
தடுப்பூசி போட்ட பின் எதிர்காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், முதல் அலையில் ஏற்பட்ட தொற்றை காட்டிலும் இது மிகவும் மிதமானதாக தான் இருக்கும் என Jeffrey Almond தெரிவித்துள்ளார்.