கொரோனா தடுப்பூசியால் HIV சோதனை செய்து கொண்ட சுவிஸ் மாணவி: வெளிவரும் பகீர் பின்னணி
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவி ஒருவர் HIV சோதனைக்கும் உட்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்ன் மாநிலத்தில் Emmental Burgdorf மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை 15 வயது மாணவி ஒருவர் தமது இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
அதன் பின்னர் பள்ளிக்கு சென்ற அந்த மாணவியை குறித்த மருத்துவமனையில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர். உடனடியாக மருத்துவமனைக்கு திரும்ப வேண்டும் எனவும், மிக அவசரம் எனவும் கூறியுள்ளனர்.
என்ன காரணம் என தெரிந்து கொள்ள முடியாமல் பதறியடித்து, மருத்துவமனைக்கு விரைந்த குறித்த மாணவிக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனைக்கு சென்ற அந்த மாணவியின் ரத்த மாதிரிகளை சேகரித்த பின்னர், அவரிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர்.
பின்னர், இறுதியாக நடந்த தவறை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில், குறித்த மாணவிக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பயன்படுத்திய சிரிஞ்சானது பலமுறை பயன்படுத்தப்பட்டதாக கண்டறிந்துள்ளதை தெரிவித்துள்ளனர்.
இது ஆபத்தான செயல் என்பதால், மருத்துவமனைக்கு திரும்ப அழைத்ததாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது ரத்த மாதிரிகள் HIV சோதனைக்கும் ஹெபடைடிஸ் பி மற்றும் சி சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.
HIV தொற்று தொடர்பான சோதனை முடிவுகளுக்கு 2 முதல் 6 வாரங்கள் வரையில் ஆகலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் குறித்த மருத்துவமனை நிர்வாகிகள் கூறும் தகவலில் தமக்கு சந்தேகம் இருப்பதாகவும், முழுமையாக நம்ப முடியவில்லை எனவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இது ஆரோக்கியம் மற்றும் மனித வாழ்க்கையைப் பற்றியது, எனவே சிறப்பு எச்சரிக்கை தேவை.
இதுபோன்ற நிலை யாருக்கும் ஏற்படுவதை நான் முற்றிலும் விரும்பவில்லை என குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.