கனேடிய மாகாணம் ஒன்றில் இனி இதற்கு இது கட்டாயம்
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அரசாங்கத்தின் நிதியுதவி பெறும் கடைகளில் மது அல்லது கஞ்சாவை வாங்க கொரோனா தடுப்பூசி ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்ற விதி அமுலுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
கொரோனா பரவல் நாளும் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்களில் தடுப்பூசி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலேயே குறித்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவர உள்ளனர்.
வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே குறித்த புதிய திட்டம் தொடர்பில் அறிவித்தார். அனைத்து குடிமக்களும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றவுடன் அதிகாரிகள் இறுதி திகதியை தீர்மானிப்பார்கள் என்று டுபே கூறினார்.
மேலும், தடுப்பூசி போடப்படாதவர்கள் இந்த புதிய திட்டத்தில் மகிழ்ச்சியடையவில்லை என்றால், உங்கள் வசம் மிகவும் எளிமையான தீர்வு உள்ளது. அது தடுப்பூசி போட வேண்டும் என்பதே, இலவசமும் கூட என தெரிவித்துள்ளார் அமைச்சர்.
அல்லது நீங்கள் தடுப்பூசி மறுப்பாளர் எனில், வீட்டிலேயே தங்கியிருங்கள், பிரச்சனை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர் டுபே கூற்றுப்படி, தடுப்பூசி போடப்படாத நபர்கள் தங்கள் தொடர்புகளைக் கட்டுப்படுத்தவும் வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்கவும் அணுகக்கூடிய இடங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த இருக்கிறது என்பதே.
புதிய திட்டத்தின் அடிப்படையில் மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.
இதனிடையே, 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு, பூஸ்டர் தடுப்பூசிகளுக்கான வாய்ப்பை மாகாண நிர்வாகம் வழங்கியுள்ளது. ஜனவரி 17 முதல் அனைத்து பெரியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வாய்ப்பை அதிகாரிகள் விரைவில் விரிவுபடுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.