கொரோனா கசிந்தது குறித்து பிரித்தானியா புலானாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்
கொரோனா வைரஸ் வுஹான் நகரில் உள்ள ஆய்வகத்திலிருந்து கசிந்ததற்கான ஆதராங்கள் இப்போது சீனா அதிகாரிகள் அழிக்கப்பட்டிருக்கும் என்று முன்னாள் MI6-ன் பிரித்தானியா தலைவர் கூறியுள்ளார்.
1999 முதல் 2004 வரை MI6 பிரித்தானியாவின் தலைவராக செயல்பட்ட Sir Richard Dearlove இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sir Richard Dearlove கூறியதாவது, வுஹான் ஆய்வகம் இயற்கையான கொரோனா வைரஸை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக மாற்றுவதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வந்ததை தற்போது நிரூபிப்பது கடினம் என எச்சரித்தார்.
சீனா மீது மேற்கத்திய நாடுகள் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தன.
மேலும், வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்து வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற விஞ்ஞானிகள் சீனாவால் அமைதியாக்கப்பட்டிருக்கலாம் என Sir Richard Dearlove கூறினார்.