நிதி உதவிகளை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்க சுவிஸ் அரசு முடிவு: விவரம் செய்திக்குள்...
சுவிஸ் அரசாங்கம், அரசின் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள, தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் செய்துவரும் நிதி உதவிகளை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
நேற்று, புதன்கிழமை (15.12. 2021), சுவிஸ் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும், வேலையில்லாதவர்களுக்கான நிதி உதவிகள், குறுகிய கால பணிக்கான இழப்பீடு மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தொகை ஆகியவற்றை வழங்குவதை, 2022 இறுதி வரை நீட்டிக்க சம்மதம் தெரிவித்தன.
நாடாளுமன்றத்தின் இந்த முடிவுக்கு எந்த பெரிய கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு விடயம், சுவிட்சர்லாந்தில் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனைகள் செய்வது அக்டோபர் மாத மத்தியில் நிறுத்தப்பட்டது.
தற்போது, சுவிஸ் அரசாங்கம், சட்டத் திருத்தம் ஒன்றின்படி, சில குறிப்பிட்ட நிபந்தனைகளின்பேரில் கொரோனா பரிசோதனைகளுக்கான செலவை மீண்டும் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.