நகங்களில் வெள்ளைக் கோடு இருக்கிறதா? நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம்! பிரித்தானிய மருத்துவர் பரபரப்பு தகவல்
உங்கள் நகங்களுக்கு குறுக்கே புதிதாக வெள்ளை நிற கோடுகள் அல்லது பள்ளங்கள் ஏற்பட்டால், நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதன் அறிகுறியாக இருக்கலாம் என்று பிரித்தானிய நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
நகங்களின் குறுக்கே கிடைமட்டமாக வெள்ளை நிறத்தில் தெளிவான கோடு வளர்ந்திருந்தால் அது 'கோவிட் நகம்' என்று அழைக்கப்படுகிறது.
ஏனென்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் நகங்களில் இதுபோன்ற அறிகுறிகள் தென்படுவதாகவும், ஆனால் அதனால் பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும் தோல் மருத்துவர் Tim Spector கூறுகிறார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த வரிகள் ஏற்படாது, ஆனால் சிலருக்கு இப்படி நடக்க வாய்ப்பு உள்ளது என அவர் கூறுகிறார்.
Do your nails look odd? COVID nails are increasingly being recognised as the nails recover after infection and the growth recovers leaving a clear line. Can occur without skin rashes and appears harmless pic.twitter.com/Q1Lfdrc9Dc
— Tim Spector (@timspector) May 3, 2021
அதேபோல், நகங்களில் இதுபோன்ற கோடு வளர்ந்தாலே கொரோனா தான் என முடிவு செய்யமுடியாது. ஊட்டச்சத்து குறைபாடு, தைராய்டு நோய், நீரிழிவு நோய் அல்லது இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை போன்ற கடுமையான நோய்களால் நகத்தின் வடிவத்தில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது வெள்ளை நிற கோடு ஏற்படலாம் என அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த அறிகுறி ஒருவர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களை கழித்து ஏற்படலாம் என ஸ்பெக்டர் கூறுகிறார்.
பேராசிரியர் ஸ்பெக்டர் லண்டனின் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் குழுவை வழிநடத்துகிறார். இந்தக் குழு கொரோனா வைரஸின் பொதுவான மற்றும் குறைவான பொதுவான அறிகுறிகளைக் கண்டறிய மக்களுக்கு உதவும் வகையில் Zoe Covid Symptom Study எனும் செயலியை உருவாக்கியுள்ளது.
இந்த App-ஐ மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் பயன்படுத்தியுள்ளனர். மேலும் கொரோனாவால் மக்கள் எந்த வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு இது உதவியாக இருந்தது.