இந்த இடங்களில் கோவிட் கடவுச்சீட்டு கட்டாயம்! பிரித்தானிய அரசு அதிரடி
பிரித்தானியாவில் பப், பார், உணவகம், கிளப் உள்ளிட்ட சமூக இடைவெளி சாத்தியமில்லாத இடங்களில் கோசிட் கடவுச்சீட்டு கட்டாயமாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் நான்காவது அலையை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக பிரித்தானிய அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், கோவிட் கடவுச்சீட்டு கட்டாயமாக்கப்படுவதன் மூலம், இளைஞர்களிடையே தடுப்பூசி விகிதங்களை அதிகரிக்கும் மற்றும் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதைத் தடுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
எனவே, இலையுதிர்காலத்தில் கொரோனா வைரஸின் நான்காவது அலையைத் தடுக்கும் திட்டத்தின் கீழ் பப்கள், பார்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளுக்குள் நுழைய பிரித்தானியர்களுக்கு கோவிட் சான்றிதழ்கள் கட்டாயம் ஆக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இப்படி செய்வதன் மூலம், செப்டம்பர் மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற அரசின் இலக்கு சாத்தியம் ஆகும் என நம்பப்படுகிறது.
குறிப்பிடப்பட்டுள்ள பொது இடங்களுக்குள் ஒருவர் அனுமதிக்கப்பட வேண்டும் எனில், அவர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும், அல்லது தனக்கு கோவிட் நெகட்டிவ் என்பதை உறுதிப்படுத்தும் சமீபத்திய சோதனை ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.