நீங்கள் செய்தது தெருவில் போதைப்பொருள் விற்கும் குற்றத்துக்கு இணையானது: நீதிபதியால் கண்டனத்துக்குள்ளான நபர்
கனடாவில் கொரோனா விதிகளை மீறிய ஒருவரை, நீங்கள் செய்தது, தெருவில் போதைப்பொருள் விற்கும் குற்றத்துக்கு இணையானது என்று கூறி கண்டித்தார் நீதிபதி ஒருவர்.
வான்கூவரில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த பொலிசார், அங்கு கொரோனா விதிகளை மீறி மக்கள் மது அருந்திக்கொண்டிருந்ததையும், அரை நிர்வாணப் பெண்கள் நடனமாடிக்கொண்டிருந்ததையும் கண்டுள்ளனர்.
அந்த வீட்டின் உரிமையாளரான Mohammad Movassaghi என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும், 5,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Mohammadஇன் வழக்கறிஞர், தனது வழக்கறிஞர் ஒரு பார்ட்டி நடத்தியதாகவும்,அந்த பார்ட்டி கைமீறிப்போய்விட்டதாகவும் வாதம் ஒன்றை முன்வைத்தார். அதை மறுத்த நீதிபதி, பார்ட்டிகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதில்லை, நீங்களோ கட்டணம் வசூலித்துள்ளீர்கள், அத்துடன், அரை குறை ஆடையுடன் பெண்கள் நடனமாட, ஒரு கூட்டம் ஆண்கள் அவரை சுற்றி நின்று வேடிக்கை பர்த்திருக்கிறார்கள்.
ஆகவே, அது பார்ட்டியே அல்ல, அது ஒரு குற்றச்செயல் என்றார் நீதிபதி Ellen Gordon. அத்துடன், உங்கள் பார்ட்டியில் பங்கேற்ற யாரோ ஒருவர் கொரோனா தொற்றி உயிரிழந்துவிட்டால், என்னைப் பொருத்தவரை நீங்கள் செய்தது கொலை, உங்கள் பார்ட்டிக்கு வந்த யாரோ ஒருவர் கொரோனா தொற்றி, அதை தன் பாட்டிக்கு கடத்தியிருந்தால், என்னைப் பொருத்தவரை நீங்கள் செய்தது கொலைக்குற்றம் என்றார் நீதிபதி.
நீங்கள் செய்தது, தெருவில் யாரோ ஒருவரை தினமும் பலிவாங்கும் போதைப்பொருள் விற்கும் செயல் போன்றது என்று கூறிய நீதிபதி, இரண்டுக்கும் வேறுபாடில்லை, கொள்ளைநோய் காலகட்டத்தில் நீங்கள் மக்களை கொல்லும் அபாயத்திற்கு உட்படுத்தியிருக்கிறீர்கள் என்றார்.
Mohammadக்கு ஒரு நாள் சிறைத்தண்டனையும், 5,000 டொலர்கள் அபராதமும்
விதிக்கப்பட்டுள்ளதோடு, அவர் 50 மணி நேரம் சமூக சேவை செய்யவேண்டும் என்றும்
நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.