சுற்றுலா சென்றவர்கள் நாடு திரும்புவதால் சுவிட்சர்லாந்தில் உருவாகியுள்ள பிரச்சினை
சுற்றுலா சென்றிருந்தவர்கள் நாடு திரும்பத் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இந்த வாரத்தில் சுவிட்சர்லாந்தில் புதிதாக 11,407 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது 81 சதவிகிதம் அதிகமாகும். கடந்த வாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 6,303.
அத்துடன், கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. முந்தைய வாரம் 67ஆக இருந்த அந்த எண்ணிக்கை, இந்த வாரம் 143ஆக உயர்ந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரம் 3ஆக இருந்தது, இந்த வாரம் 8ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, சுற்றுலா சென்றுவிட்டு சுவிட்சர்லாந்து திரும்புபவர்களில் கால்வாசி பேர் முதல் மூன்றில் ஒரு பங்கினர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.