சுவிட்சர்லாந்தில் மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா தொற்று: என்ன காரணம்?
சுவிட்சர்லாந்தில், கடந்த வாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதற்கு தடுப்பூசி போடுவதன் வேகம் குறைந்துள்ளதே காரணம் என கருதப்படுகிறது. இதுவரை சுவிட்சர்லாந்தில் 48 சதவிகிதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
4 சதவிகிதம் பேர் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆனால், கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்தும் வீதம் குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த வாரத்தில் 4,998 பேருக்கு புதிதக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மை டெல்டா வகை கொரோனா வைரஸால் ஏற்பட்ட தொற்று.
ஆனால், ஒரே ஆறுதல், சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது மட்டும்தான்.கடந்த வாரத்தில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.
கொடுக்கப்பட்ட தடுப்பு மருந்து தொற்றுக்கும் இறப்புக்கும் இடையிலான பிணைப்பை உடைத்துவிட்டது போலுள்ளது. இப்போதிருக்கும் பெரிய கவலைகளில் ஒன்று, தடுப்பூசி பெறாத மக்களைக் குறித்ததுதான்.
அத்துடன், இளம் வயதினரை அதிகம் தாக்கும் கொரோனா, நீண்ட கால கொரோனா ஆகியவையும் கவலையளிப்பவையாக உள்ளன.
தடுப்பூசியின் வீதம் குறைந்துவிட்டதால், மீண்டும் முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமுல்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.