சுவிட்சர்லாந்தில் இந்த வாரமும் அதிகரித்தவண்ணமே உள்ள கொரோனா தொற்று... நான்காவது அலைக்கு வாய்ப்பு?
சுவிட்சர்லாந்தில் இந்த வாரமும் கொரோனா தொற்றுக்கு ஆளார்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்துள்ளது.
கடந்த வாரம் 11,407 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில், இந்த வாரம் 14,811 பேருக்கு புதிதாக கொரோனா தொற்றியுள்ளது. இது கடந்த வாரத்தைவிட 30 சதவிகிதம் அதிகமாகும்.
இந்நிலையில், நான்காவது அலைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார் சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset.
கொரோனாவின் நான்காவது அலைக்கு சுவிட்சர்லாந்தும் தப்ப வாய்ப்பில்லை என்று கூறியுள்ள அவர் ஒரே வித்தியாசம் இம்முறை மக்கள் தடுப்பூசி பெற்றுள்ளார்கள் என்பதுதான் என்கிறார்.
சுவிஸ் மக்கள்தொகையில் 51 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுவிட்டது.
ஆனாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கவலையை அளிப்பதாகவே உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகத்து 15 அன்று மட்டும் 70 பேர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா காரணமாக மொத்தமாக இந்த வாரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 302.
அத்துடன், 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். கடந்த வாரம் பலியானவர்களின் எண்ணிக்கை 8 என்பது குறிப்பிடத்தக்கது.