சுவிட்சர்லாந்தில் கொரோனா பரிசோதனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பால் குழப்பம்
சுவிட்சர்லாந்தில், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இனி கொரோனா பரிசோதனைகள் இலவசம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, குழப்பத்தையும் உருவாக்கியுள்ளது. கொரோனா பரிசோதனை செய்துகொள்ள விரும்புவோர், தங்களுக்கு கொரோனா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ள விரும்புவதாக தெரிவிக்கிறார்கள். உள்ளூர் மருந்தகங்களோ குழப்பத்தில் உள்ளன.
ஏனென்றால், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து விடுபட்டவர்களுக்கும் இலவச கொரோனா பரிசோதனை கிடையாது. ஆகவே, விடுபட்டவர்கள் என்பதன் உண்மையான பொருள் என்ன என்று எனக்குப் புரியவில்லை என்கிறார் மருந்தக ஊழியர் ஒருவர்.
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும், ஏற்கனவே கொரோனா தொற்றி, அதிலிருந்து விடுபட்டவர்களுக்கும் கொரோனா பரிசோதனை இனி இலவசம் அல்ல என்று பெடரல் சுகாதார அலுவலகத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.
சுவிட்சர்லாந்தில், ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்வதற்கான கட்டணம் 60 சுவிஸ் ஃப்ராங்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இலவசமாக என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் பரிசோதனை செய்துகொள்வோம், கட்டணம் செலுத்தி யாராவது பரிசோதனை செய்துகொள்வார்களா என்று மக்கள் கூறுவது போல் இருக்கிறது!