பிரித்தானியாவில் அமுலுக்கு வந்த புதிய விதி! நாட்டிற்குள் நுழைய யாருக்கெல்லாம் அனுமதி?
பிரித்தானியாவில் இன்று முதல் புதிய பயண விதிகள் அமுலுக்கு வந்துள்ளன.
பிரித்தானியா அரசாங்கத்தின் பச்சை பட்டியலில் புதிதாக 7 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேசமயம், சிவப்பு பட்டியலில் இரண்டு நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. சிவப்பு பட்டியலில் இடம்பெறும் நாடுகள் கொரோனாவால் அதிக ஆபத்துள்ள இடங்களாக கருதப்படுகின்றன.
திங்கட்கிழமை ஆகஸ்ட் 30-ஆம் திகதி உள்ளூர் நேரப்படி 04:00 BST மணி முதல் பிரித்தானியாவின் சமீபத்திய கொரோனா பயண விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
அதன்படி, பச்சை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள கனடா, டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, அசோர்ஸ், லிச்சென்ஸ்டீன் மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகள் இனி தனிமைப்படுத்த தேவையில்லை.
சிவப்பு பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட தாய்லாந்து மற்றும் மாண்டினீக்ரோவிலிருந்து வரும் பயணிகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால், பிரத்தானியாவுக்கு வரும் பயணிகள் கட்டாயம் ஒரே ஒரு கொரோனா பரிசோதனையாவது மேற்கொண்டிருக்க வேண்டும். பிரித்தானியாவின் பயணப் பட்டியல்கள் தற்போது ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் புதுப்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.