முயல் ஆமை கதை போல் பிரித்தானியாவை முந்தும் பிரான்ஸ்?
ஓட்டப்பந்தயத்தில், முயலை முந்திய ஆமை கதையில் வருவதுபோல், கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பிரான்ஸ் பிரித்தானியாவை முந்துவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
தற்போதைய நிலவரத்தைப் பார்த்தால், இன்னும் மூன்று வாரங்களில் கொரோனா தடுப்பூசி வழங்குவதில் பிரித்தானியாவை பிரான்ஸ் முந்திவிடும் போலிருக்கிறது.
இன்னும் இரண்டு வாரங்களில் பிரித்தானியாவின் மக்கள் தொகைக்கு கிட்டத்தட்ட சம அளவில் மக்கள் தொகை கொண்ட பிரான்ஸ், பிரித்தானியாவை விட அதிக அளவில் முழுமையாக தடுப்பூசி பெற்ற மக்களைக் கொண்ட நாடாக ஆக உள்ளது.
பரபரப்பாக தன் குடிமக்களுக்கு தடுப்பூசி வழங்கத் தொடங்கிய பிரித்தானியா, சென்ற மாதம் வேகம் குறைந்தது. இன்று நாளொன்றிற்கு சராசரியாக 330,000 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கும் முதல் நாடாக பிரான்ஸ் ஆகியுள்ள நிலையில், பிரித்தானியாவிலோ நாளொன்றிற்கு 44,000 பேருக்குதான் தடுப்பூசி வழங்குகிறது.
அதேபோல் பிரான்ஸ் 400,000 பேருக்கு நாளொன்றிற்கு முழுமையாக தடுப்பூசி வழங்கும் நிலையில், பிரித்தானியாவில் அந்த எண்ணிக்கை 170,000ஆகத்தான் உள்ளது. பரபரப்பாக பிரித்தானியா தடுப்பூசி அளிக்கத் தொடங்கிய நிலையில், பிரான்ஸ் மெதுவாகத்தான் தொடங்கியது.
சிலர் பிரித்தானியாவில் கிட்டத்தட்ட மந்தை நோயெதிர்ப்பு சக்தி வரும் அளவுக்கு தடுப்பூசி வழங்கியாயிற்று என்கிறார்கள்.
ஆனால், தடுப்பூசி போட்டு முடிக்கும் நேரத்தில் இப்போது பிரான்ஸ் வேகமெடுத்துள்ள நிலையில், பிரித்தானியா வேகம் குறைந்துள்ளது.
ஆக, ஈசாப் நீதிக்கதையில் வருவது போல, கடைசியில் கொஞ்சம் தூக்கம் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து முயல் தூங்கும்போது ஆமை அதை முந்திவிட்டதுபோல், இப்போது தடுப்பூசி வழங்கும் விடயத்தில், கடைசி நேரத்தில் பிரான்ஸ் பிரித்தானியாவை முந்திவிடும்போலிருக்கிறது.